வேலைநிறுத்தத்தில் பங்கேற்க முடியாது. விஷாலுக்கு திரையரங்க உரிமையாளர்கள் தகவல்

வேலைநிறுத்தத்தில் பங்கேற்க முடியாது. விஷாலுக்கு திரையரங்க உரிமையாளர்கள் தகவல்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவரும், நடிகர் சங்க செயலாளருமான விஷால் வரும் ஜூன் 1 முதல் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் என்று அறிவித்திருந்தார். இந்த வேலைநிறுத்தத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் விநியோகிஸ்தர்கள் சங்கம் பங்கேற்காது என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெள்யிட்டுள்ளனர். இதுகுறித்து இரு அமைப்புகளும் கூட்டாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகிஸ்தர்கள் கூட்டமைப்பும் இணைந்து வெளியிடும் கூட்டறிக்கை என்னவென்றால், வருகின்ற 30.05.2017 அன்று வழக்கம் போல தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் இயங்கும். வழக்கம்போல திரைப்பட காட்சிகள் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும் மே மாத கடைசி வாரம் யாரும் எந்த திரைப்படங்களையும் வெளியிட வேண்டாம் என்று விஷால் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் மே 26ஆம் தேதி சமுத்திரக்கனியின் ‘தொண்டன்’ மற்றும் அருள்நிதியின் ‘பிருந்தாவனம்’ ஆகிய படங்கள் வெளிவருவது உறுதி என்பதால் விஷாலின் வேலைநிறுத்த திட்டம் வாபஸ் பெறப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply