shadow

மக்கள் திலகம் எம்ஜிஆர் பட டைட்டிலில் மூன்று வேடங்களில் விஷால் நடிக்கும் படம் குறித்த தகவல் வெளிவந்து பரபரப்பாகியுள்ளது

விஷால் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கும் திரைப்படம் ஒன்று தயாராக உள்ளது இந்த படத்தை இயக்குனர் பொன்ராம் அவர்களிடம் உதவி இயக்குநராக இருந்த வெங்கடேசன் என்பவர் இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் படத்திற்கு நாளை நமதே என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 1705 ஆம் ஆண்டு இரண்டு வேடங்களில் எம்ஜிஆர் மற்றும் லதா நடிப்பில் வெளியான திரைப்படத்திற்கு நாளை நமதே என்று பெயர் வைத்து விட்ட நிலையில் தற்போது நாற்பத்தி ஐந்து வருடம் கழித்து அதே டைட்டிலில் மீண்டும் ஒரு படம் தயாராகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருப்பதாகவும் சதீஷ் உள்பட பல முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன விரைவில் இந்த படத்தில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது