shadow

விஷாலின் ‘லத்தி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஷால் நடித்த ’லத்தி’ திரைப்படம் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

யுவன்சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ’லத்தி’ படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என 4 மொழிகளில் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது

விஷால் ஜோடியாக சுனைனா நடித்துள்ள இந்த படத்தை வினோத்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தை நடிகர்கள் ராணா மற்றும் நந்தா தயாரித்து உள்ளனர்.