shadow

பள்ளி மாணவர்களுக்கு விஷால் செய்த உதவி

நடிகரும், நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால், தனது தேவி அறக்கட்டளை மூலம் பல்வேறு சமூக சேவைகளை செய்து வரும் நிலையில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு அவர் ஒரு பெரிய உதவியை செய்துள்ளார்.

நடிகர் விஷால் அவர்கள் நடத்திவரும் தேவி அறக்கட்டளை சார்பில் பல சமூக சேவைகளும் மற்றும் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களின் பெயரில் வருடம் தோறும் எண்ணற்ற மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்கியும் மேற்படிப்பு படிக்கமுடியாத மாணவ, மாணவிகளுக்கு உதவி செய்து படிக்கவைத்தும் வருகின்றார்.

அதனையடுத்து இந்த வருடமும் பனிரெண்டாவது படித்து முடித்து மேற்கொண்டு படிக்கமுடியாத மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு வழிவகை செய்துள்ளனர். இந்த தகவலை தேவி அறகட்டளை ஒருங்கிணைப்பாளர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply