வடபழனி கோவிலில் பிச்சை எடுத்த ஜெயலலிதாவுடன் நடித்த நடிகைக்கு விஷால் உதவி

வடபழனி கோவிலில் பிச்சை எடுத்த ஜெயலலிதாவுடன் நடித்த நடிகைக்கு விஷால் உதவி

கடந்த இரண்டு நாடுகளுக்கு முன்னர் சிவாஜி, ஜெயலலிதா போன்றவர்களுடன் நடித்த ஜமுனா என்ற குரூப் டான்ஸ் நடிகை வடபழனி கோவில் அருகே வறுமையின் காரணமாக பிச்சையெடுத்து கொண்டிருக்கின்றார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் அவருக்கு தற்போது நடிகர் விஷால் தனது தேவி அறக்கட்டளை மூலம் உதவி செய்துள்ளார்.

விஷாலின் மேலாளர் முருகராஜ் மற்றும் அகில இந்திய விஷால் நற்பணி இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன் ஆகிய இருவரும் வடபழனி சென்று ஜமுனாவை கண்டுபிடித்து அவருக்கு தேவையான உதவியை செய்துள்ளனர். ஜமுனாவிற்கு மாதம் ரூ.2000 தேவி அறக்கட்டளை மூலம் வழங்குவதாக கூறிய அவர்கள் அவருக்கு புதுத்துணி உள்பட அடிப்படை தேவைகள் அனைத்தையும் வழங்கினர். மேலும் அவர் விரும்பினால் முதியோர் இல்லத்தில் சேர்க்கவும் வழிவகை செய்வதாக கூறினர். ஆனால் ஜமுனா தான் முதியோர் இல்லம் செல்ல விரும்பவில்லை என்று கூறிவிட்டதாக தெரிகிறது.

தனக்கு தகுந்த நேரத்தில் உதவி செய்த விஷாலுக்கு ஜமுனா நன்றி கூறியுள்ளார். விஷாலின் இந்த உதவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Leave a Reply