shadow

விஷாலுக்கு பிறந்த நாள் பாடலை பாடிய ரசிகர்கள்

நடிகர் விஷால் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்காக ஒரு பிரத்யேக பாடலை உருவாக்கி யூடியூபில் வெளியிட்டுள்ளனர் அவரது ரசிகர்கள். விஷால் ஆன்ந்தம் (Vishal Anthem) என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த பாடலை முருகன் மந்திரம் என்பவர் எழுத, இதற்கு இஷான் தேவ் இசையமைத்துள்ளார். கா.ராஜீவ்காந்தி இயக்கத்தில் உருவான இந்த பாடலை நிகில் மாத்யூ மற்றும் இஷான் தேவ் ஆகியோர் பாடியுள்ளனர்

ஏற்கனவே சிம்புவின் லவ் ஆன்ந்தம், தனுஷின் சச்சின் ஆன்ந்தம் ஆகிய பாடல்கள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது விஷாலுக்கும் ஆன்ந்தம் வெளியாகியுள்ளது. இந்த பாடலை விஷால் ரசிகர்கள் பெருமளவு ஷேர் செய்து சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

Leave a Reply