பாண்டியநாடு படத்தில் விஷாலுக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடித்தார். மதுரை பின்னணியில் எடுக்கப்பட்ட அந்த படத்தில் விஷால் – லட்சுமிமேனன் ஜோடி நன்றாக பேசப்பட்டதால், விஷால் அடுத்து தானே தயாரித்து நடிக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்திலும் லட்சுமி மேனனையே ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.

இந்நிலையில் சிங்கம் 2 படத்தை முடித்துவிட்டு, அடுத்த படத்தில் களமிறாங்கிய இயக்குனர், தனது அடுத்த படத்தின் ஹீரோவாக விஷாலை தேர்வு செய்தார். இந்த படத்தையும் விஷாலே தயார்க்கின்றார். இந்த படத்தின் கதைப்படி கிராமத்து நாயகி வேடம் இந்த வேடத்திற்கு பொருத்தமாக லட்சுமி மேனனே இருப்பார் என ஹரி கருதினார். இதை விஷாலிடம் கூற அவரும் ஓகெ சொல்லிவிட்டார். விஷாலுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜோடி சேரும் ஒரே நடிகை லட்சுமி மேனன் தான் என்பதால் சந்தோஷத்தின் உச்சிக்கே சென்று இயக்குனர் கேட்ட கால்ஷீட் தேதிகளை அள்ளிக்கொடுத்துவிட்டாராம்.
ஏற்கனவே விஷால் – ஹரி கூட்டணியில் எடுக்கப்பட்ட ‘தாமிரபரணி’ வெற்றி பெற்றுள்ளதால் இந்த வெற்றிக்கூட்டணியின் அடுத்த படத்தை ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்நோக்க ஆரம்பித்துவிட்டனர்.

Leave a Reply