shadow

Trojan and Botnetஇணையத்தின் வழியாக வைரஸ் கிருமிகளை பரப்பி டெபிட் கார்டு மற்றும் கிரடிட் கார்டு விவரங்களை திருடும் கும்பல் ஒன்று நடமாடுவதாக புதுடில்லி இணைய பாதுகாப்புத் துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே ஆன்லைன் மூலமாக டெபிட் மற்றும் கிரடிட் கார்டினை பயன்படுத்துபவர்கள் தங்கள், ரகசியக் குறியீடுகளை அடிக்கடி மாற்றி பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறும், ஏதேனும் மோசடி நடந்திருப்பதாக தெரியவந்தால் உடனடியாக சைபர் க்ரைம் காவல்துறைக்கு புகார் கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

POS (Point of Sales) எனப்படும், கடைகளில் உபயோகப்படுத்தும் கையடக்க எலக்ட்ரானிக் மிஷினில் டெபிட் கார்டு அல்லது கிரடிட் கார்டை பயன்படுத்தும்போதும் இந்த வைரசைப் பரப்புவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக டெல்லியைச் சேர்ந்த  CERT எனப்படும் இணையதள பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.

Trojan மற்றும் Botnet வகையைச் சேர்ந்த இந்த அபாயகரமான வைரசினால் ரகசியத் தகவல்கள் திருடு போக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply