3வது டி20 போட்டி: விராத் கோஹ்லி செய்த அதிரடி சாதனை

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி தற்போது மும்பையில் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் அதிரடியாக விளையாடினார்கள். ரோகித் சர்மா 71 ரன்களும் கேஎல் ராகுல் 96 ரன்களும் எடுத்தனர். இதன் பின்னர் களமிறங்கிய விராட் கோலி 29 பந்துகளில் 70 ரன்கள் அடித்து விளாசினார். மேலும் அவர் 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதுதான் விராட் கோலி எடுத்த அதிவேக அரை சதம் என்பது குறிப்பிடத்தக்கது

இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் குவித்தது. 241 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது என்பதும் இன்றைய போட்டியில் வெல்லும் அணியே இந்த தொடரை வெல்லும் அணி என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply