விராத் கோஹ்லி, புஜாரே அபார சதம். வலுவான நிலையில் இந்தியா

விராத் கோஹ்லி, புஜாரே அபார சதம். வலுவான நிலையில் இந்தியா

CRICKET-IND-ENGஇங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்று ஆரம்பமான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கியது முதல் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 317 ரன்கள் எடுத்துள்ளது.

தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் 20 ரன்களிலும், ராகுல் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனாலும், புஜாரே மற்றும் கேப்டன் விராத் கோஹ்லி இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

புஜாரே 119 ரன்கள் அடித்த நிலையில் ஆண்டர்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆனால் விராத் கோஹ்லி 151 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 317 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

Leave a Reply