shadow

திருமணத்தால் முதலிடத்தை பறிகொடுத்த விராத்கோஹ்லி

நடிகை அனுஷ்கா சர்மாவுடனான திருமணம் காரணமாக இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடாத விராட் கோலி முதல் இடத்தை பறிகொடுத்துள்ளார். அவர் இருந்த முதலிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் பிஞ்ச் 784 புள்ளிகளுடன் தற்போது உள்ளார். இவரை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் எவின் லெவிஸ் 780 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் 3வது இடத்தில் விராத் கோஹ்லியும் உள்ளனர்,.

பந்து வீச்சு தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த பும்ரா, இலங்கைக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் விக்கெட் வீழ்த்த முடியாத காரணத்தினாலும், கடைசி போட்டியில் விளையாடாத காரணத்தினாலும் 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார். பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் இமாத் வாசிம் முதல் இடத்தை பிடித்துள்ளார். ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 2-வது இடத்தில் உள்ளார்.

இலங்கைக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்த லோகேஷ் ராகுல் 23 இடங்கள் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். ரோகித் சர்மா 14-வது இடத்தை பிடித்துள்ளார்.

Leave a Reply