shadow

திருமணத்திற்கு பின்னர் விராத்கோஹ்லிக்கு ஏற்பட்ட பின்னடைவு

நடிகை அனுஷ்காவுடன் நடந்த திருமணத்திற்கு பின்னர் விராத் கோஹ்லி விளையாடிய முதல் டெஸ்ட் போட்டி தோல்வியில் முடிந்தது மட்டுமின்றி ஐசிசி தரவரிசையிலும் அவர் பின் தங்கியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் விராத்கோஹ்லி முதல் இன்னிங்சில் 5 ரன்கள் எடுத்த விராட் கோலி, 2-வது இன்னிங்சில் 28 ரன்கள் ஆட்டமிழந்தார். இதனால் ஐசிசி தரவரிசையில் 2வது இடத்தில் இருந்த விராத் கோஹ்லி, தற்போது 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

சிட்னி டெஸ்டில் அரைசதம் அடித்த ஜோ ரூட் 4-வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Leave a Reply