தனி ஒருவனாக முதல் இன்னிங்ஸை காப்பாற்றிய விராத் கோஹ்லி

தனி ஒருவனாக முதல் இன்னிங்ஸை காப்பாற்றிய விராத் கோஹ்லி

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் 153 ரன்கள் கேப்டன் விராத் கோஹ்லி அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் 335 என்று இருந்த நிலையில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் மடமடவென விக்கெட்டுக்களை இழந்து வந்தது. இந்த நிலையில் கேப்டன் விராத் கோஹ்லி பொறுப்புடன் விளையாடி 153 ரன்கள் குவித்ததால் இந்திய அணியும் 300ஐ தாண்டி முதல் இன்னிங்சில் ஸ்கோர் செய்ய முடிந்தது.

தற்போது தென்னாப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்துள்ளது. நாளை 4வது நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவின் அனைத்து விக்கெட்டுக்களையும் இந்தியா வீழ்த்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply