மைதானத்தில் இருந்து அனுஷ்காவுக்கு ஃபிளையிங் கிஸ் கொடுத்த விராத் கோஹ்லி

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நேற்று மும்பையில் நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது

இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி 29 பந்துகளில் 70 ரன்கள் அடித்து அதிரடியாக விளையாடியது இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு காரணம் ஆகும்.

இந்த நிலையில் வெற்றிக்கான ஷாட்டை அடித்தவுடன் மைதானத்தை விட்டு வெளியே வரும்போது கேலரியில் இருந்த தனது மனைவி அனுஷ்காவுக்கு விராத் கோலி ஃபிளையிங் கிஸ் கொடுத்தார். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து நேற்று இந்த ஜோடிக்கு இரண்டாவது திருமண நாள் என்பதும் இதனை அடுத்தே அவர் தனது மனைவிக்கு மைதானத்திலிருந்து பிளையிங் கிஸ் கொடுத்ததாகவும் அவர் இன்று அடித்த அதிரடி ரன்கள் தான் அவர் கொடுக்கும் திருமண பரிசு என்றும் கூறப்படுகிறது

Leave a Reply