‘கபாலி’, ‘தெறி’ படங்களுக்கு அடுத்த இடத்தை பிடித்தது ‘விஐபி 2’

‘கபாலி’, ‘தெறி’ படங்களுக்கு அடுத்த இடத்தை பிடித்தது ‘விஐபி 2’

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ மற்றும் இளையதளபதி விஜய் நடித்த ‘தெறி’ ஆகிய இரண்டு படங்களின் மலேசிய ரிலீஸ் உரிமையை பெற்று மலேசியாவில் மிகப்பெரிய அளவில் ரிலீஸ் செய்தது மாலிக் ஸ்ட்ரீம்ஸ் என்ற நிறுவனம்

இந்த இரண்டு படங்களும் தாணுவின் தயாரிப்பு என்பதும் இரண்டுமே நல்ல வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தாணுவின் அடுத்த தயாரிப்பான தனுஷ் நடித்த ‘விஐபி 2’ படத்தின் மலேசிய உரிமையையும் இதே நிறுவனம் பெற்றுள்ளது.

கபாலி, தெறி, போலவே இந்த படத்தையும் மலேசியாவில் மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்தி வெற்றிப்படமாக்க வேண்டும் என்பதே தங்கள் நிறுவனத்தின் ஆசை என்று அதன் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply