shadow

vineeth srinivasanமலையாளத்தின் அறிமுக இயக்குனர் அன்வர் சாதிக் என்பவர் இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிகை நமீதா பிரமோத், வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் ஜோடியாக நடிக்கவுள்ளனர். ஏற்கனவே இருவரும் ‘சென்னையில் ஓர்நாள்’ படத்தின் ஒரிஜினல் மலையாள படமான “டிராபிக்” படத்தில் நடித்திருந்தாலும், இருவரும் சேர்ந்து வரும்படியான காட்சிகள் அந்த படத்தில் இல்லை. தற்போது நமீதாவுடன் ஜோடி சேர்ந்தது குறித்து ஸ்ரீனிவாசன் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக கூறியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் பெங்களூர் மற்றும் புனாவில் நடந்து வருகின்றன என்றும், இதுவரை தான் ஏற்று நடிக்காத வித்தியாசமான வேடத்தில் நடித்துக்கொண்டிருப்பதாகவும் நமீதா பிரமோத் கூறியுள்ளார். ஒரு சிலர் தன்னுடைய பெயரில் கோலிவுட்டில் பிரபல நடிகை ஒருவர் இருப்பதால் தான் பெயரை  மாற்றிக் கொள்ளுமாறு அறிவுரை கூறியதாகவும், ஆனால் யாருக்காகவும் தன்னால் பெயரை மாற்றிக்கொள்ள முடியாது என்று தான் கூறிவிட்டதாகவும் கூறிய நமீதா, விரைவில் தமிழ் படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருப்பதாகவும் கூறினார்.

இந்த படத்தின் தனக்கும் ஸ்ரீனிவாசனுக்கும் திருவனந்தபுரம் சர்ச்சில் திருமணம் நடைபெறுவது போன்ற ஒரு காட்சி சமீபத்தில் எடுக்கப்பட்டதாகவும், நிஜ திருமணம் போலவே பிரமாண்டமாக அந்த படப்பிடிப்பு நடந்ததாகவும் நமீதா கூறியுள்ளார்.

Leave a Reply