ஆன்லைன் ரம்மியில் 5 லட்சம் லாஸ்: தூக்கில் தொங்கிய இளைஞர், இளம் மனைவி கதறல்!

ஆன்லைம் ரம்மியில் 5 லட்ச ரூபாய் இழந்ததை அடுத்து விழுப்புரம் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவருடைய மனைவி கதறி அழுத காட்சி காண்போரை தண்ணீர் கலங்க வைத்தது.

விழுப்புரத்தை சேர்ந்த பச்சையப்பன் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 5 லட்ச ரூபாய் இழந்ததாக தெரிகிறது
இதனால் மன உளைச்சலில் இருந்த இளைஞர் பச்சையப்பன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்

கணவர் தூக்கில் தொங்குவதை பார்த்து அவருடைய இளம் மனைவி புஷ்பா கதறி அழுதது அனைவரும் அனைவர் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்