காக்க காக்க, வேட்டையாடு விளையாடு போன்ற படங்களில் வில்லனாக தனது நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் டேனியல் பாலாஜி முதல்முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

டேனியல் பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்து அவரே இயக்கும் இந்த படத்திற்கு ‘குறோணி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை எம்.ஆர்.கணேஷ்  தயாரிக்கின்றார். டேனியல் பாலாஜிக்கு ஜோடியாக நடிக்க தமிழ் முன்னணி நடிகை ஒருவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே ‘பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தை எடுத்து முடித்துவிட்டு அடுத்த மாதம் 7ஆம் தேதி அந்த படத்தை ரிலீஸ் செய்கிறது. இதனிடையே இந்த படத்தின் பூஜையையும் அதே நாளில் வைக்க முடிவு செய்துள்ளது.

டேனியல் பாலாஜி தற்போது ரஜினிகாந்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ‘வை ராஜா வை’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply