விக்ரம் படத்தின் நாயகி ஆகும் மகேஷ்பாபு நாயகி

விக்ரம் படத்தின் நாயகி ஆகும் மகேஷ்பாபு நாயகி
rahul-preetisinghசமீபத்தில் வெளியான விக்ரம் நடித்த ‘இருமுகன்’ படத்தின் வெற்றியை அடுத்து அவர் ஹரியின் இயக்கத்தில் ‘சாமி 2’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ப்ரித்திசிங் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. ராகுல் ப்ரித்திசிங் ஏற்கனவே மகேஷ்பாபு-ஏ.ஆர்.முருகதாஸ் படத்திலும், விஷால்-மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’ படத்திலும் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே

‘சாமி’ படத்தின் முதல் பாகத்தில் நடித்த த்ரிஷாவும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் ஷிபுதமீன் கூறியுள்ளார். இவர்தான் ‘இருமுகன்’ படத்தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply