shadow

ஹாலிவுட் பட ரீமேக்கில் விக்ரம்-சூர்யா-கார்த்தி

suryaகோலிவுட் திரையுலகில் சகோதரர்களான சூர்யாவும் கார்த்தியும் பல வெற்றி படங்களை தனித்தனியே கொடுத்து வந்தபோதிலும் இதுவரை ஒரு படத்தில்கூட இருவரும் இணைந்து நடிக்கவில்லை. சரியான ஸ்கிரிப்ட் அமைந்தால் சேர்ந்து நடிக்க தயாராக உள்ளதாக இருவருமே அடிக்கடி பல பேட்டிகளில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாலிவுட் திரையுலகில் அக்சயகுமாரின் நடிப்பில் தயாரான ‘பிரதர்ஸ்’ என்ற திரைப்படம் வரும் 14ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது. இந்த படம் ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன ‘வாரியர்’ (Warrior) என்ற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பிரதர்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர் தற்போது இதே படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அதன் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. குத்துச்சண்டை போட்டி குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களான இரண்டு சகோதரர்கள் கேரக்டர்களில் சூர்யா மற்றும் கார்த்தியும், மற்றொரு முக்கிய கேரக்டரில் விக்ரமும் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதேபோல் தெலுங்கில் பிரபாஸ், ராணா மற்றும் ராம்சரண் தேஜா ஆகியோர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பிரதர்ஸ் படத்தின் நாயகியாக நடித்த ஜாக்குலின் பெர்னாண்டஸ் வேடத்தில் நடிக்க பிரபல நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், அவரே தமிழ், மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் நடிப்பார் என கூறப்படுகிறது.

Leave a Reply