விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு: நாசாவின் புகைப்படம் இதோ

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சந்திராயன்-2 என்ற விண்கலம் மூலம் செலுத்தப்பட்ட விக்ரம் லேண்டர் திடீரென மாயமானதை அடுத்து அந்த விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் பணியில் கடந்த சில மாதங்களாக இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்தனர். அதே நேரத்தில் நாசா விஞ்ஞானிகளும் விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டனர்

இந்த நிலையில் சந்திராயன்-2 மூலம் நிலவிற்கு செலுத்தப்பட்டு மாயமான விக்ரம் லேண்டர் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. நாசா இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது

இதனை அடுத்து கண்டுபிடிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் தற்போது செயல்படும் நிலையில் இருக்கின்றதா? அதை செயல்படுத்த வைக்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்த ஆய்வுகளை நாசா விஞ்ஞானிகளும் இஸ்ரோ விஞ்ஞானிகளும் கலந்து ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி இந்திய மக்களுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த விண்வெளி துறைக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply