shadow

மேலும் ஒரு வங்கி மோசடி: ரூ.800 கோடி கடன் பெற்று தலைமறைவான தொழிலதிபர் கைது

விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோர் வங்கிகளில் கடன் பெற்று அவற்றை திரும்ப கட்டாமல் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுவிட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு தொழிலதிபர் ரூ.800 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது

ரோடோமேக் பென்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் விக்ரம் கோத்தாரி, 5 பொதுத்துறை வங்கிகளில் ரூ.800 கோடி கடன் பெற்று அதனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டதாக கூறப்பட்டது. கான்பூரில் இயங்கி வந்த விக்ரம் கோத்தாரியின் தலைமை அலுவலகம் கடந்த ஒரு வாரமாக மூடப்பட்டிருந்ததால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் விதிகளுக்கு புறம்பாக கோத்தாரிக்கு பொதுத்துறை வங்கிகளான அலகாபாத் வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் யூனியன் வங்கி ஆகியவை ரூ.800 கோடி அளவுக்கு கடன் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று திடீரென விக்ரம் கோத்தாரியின் அலுவலங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றதாகவும், சிபிஐ சோதனைக்கு பிறகு ரோடோமேக் பென்ஸ் நிறுவன அதிபர் விக்ரம் கோத்தாரி கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அடுத்தடுத்து வங்கி மோசடிகள் வெளியாகி கொண்டிருப்பதால் வங்கிகளின் நம்பகத்தன்மை குறைந்து வருவதாக பொதுமக்களிடம் கருத்துக்கள் எழுந்துள்ளது.

Leave a Reply