shadow

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு படத்தில் விக்ரம் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விக்ரமின் மேனேஜர் தனது டுவிட்டர் பக்கத்தில் மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்று தெரிவித்துள்ளார்

பத்திரிகை மற்றும் ஊடகங்கள் இது மாதிரியான செய்திகளை வெளியிடும் முன் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்