shadow

விக்ரமின் ‘இருமுகன்’ ரிலீஸ் தேதி குறித்த முக்கிய அறிவிப்பு
vikram
10 எண்றதுக்குள்ள’ படத்திற்கு பின்னர் நடிகர் விக்ரம் தற்போது ‘அரிமாநம்பி’ இயக்குனர் ஆனந்த்சங்கர் இயக்கத்தில் ‘இருமுகன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மலேசிய படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்டமான சுரங்கம் போன்ற செட்டில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

‘இருமுகன்’ திரைப்படம் வரும் ஜூலை 8ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தேதியில்தான் இஸ்லாமியர்களின் ரம்ஜான் திருநாள் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரும் மே மாதம் முதல் வாரத்தில் இந்த படத்தின் டீசரும், நான்காவது வாரத்தில் இசை வெளியீட்டு விழாவும் நடைபெறும் என கூறப்படுகிறது.

முதன்முதலாக இரண்டு வித்தியாசமான வேடங்களில் விக்ரம் நடித்து வரும் இந்த படத்தில் நயன்தாரா, நித்யாமேனன், நாசர், தம்பிராமையா, யூகிசேது உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இந்த படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரித்து வருகிறார்.

Leave a Reply