shadow

விஜய்யின் திடீர் அமெரிக்க பயணம். அதிர்ச்சியில் ரசிகர்கள்
vijay1
இளையதளபதி விஜய்யின் 42வது பிறந்த நாள் நாளை வெகுசிறப்பாக கொண்டாட விஜய் ரசிகர்கள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். சென்னையில் பலதெருக்களில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே விஜய்யின் போஸ்டர், கட் அவுட், பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜய் தற்போது ‘விஜய் 60’ படப்பிடிப்பில் இருப்பதால் அவர் இந்த வருடம் பிறந்த நாளுக்கு சென்னை வரமாட்டார் என்று கூறப்பட்டது. இருப்பினும் கடைசி நேரத்தில் ஏதாவது அதிசயம் ஏற்பட்டு அவர் சென்னை வருவார் என்று விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக விஜய் தனது குடும்பத்தினர்களுடன் அமெரிக்கா சென்றுவிட்டதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அமெரிக்காவில் அவர் இவ்வருட பிறந்த நாளை கொண்டாடுவார் என்றும் இதன் காரணமாக ‘விஜய் 60’ படப்பிடிப்பு இரண்டு வாரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply