shadow

சித்திரக்குள்ளன் விஜய்க்கு ஜோடியான சித்திரக்குள்ளி யார்?

puli vijayவிஜய் நடித்துள்ள ‘புலி’ படத்தில் விஜய்யின் கேரக்டர் குறித்து நாள்தோறும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்ற நிலையில் அவர் ஒருசில காட்சிகளில் ‘அபூர்வ சகோதரர்கள் ‘கமல்’ போல குள்ளனாக நடித்துள்ளதாக ஒருசில இணையதளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது. இந்த தகவல்கள் குறித்து படக்குழுவினர் பதில் சொல்ல மறுத்த நிலையில் தற்போது சித்திரக்குள்ளன் வேடத்தில் ஒருசில காட்சிகளில் விஜய் நடித்துள்ளது உறுதியாகியுள்ளது.

கடந்த ஞாயிறு அன்று புலி படத்தின் பாடல்கள் வெளியானது. அந்த பாடல்களின் ஒன்றில் “ஜிங்குலியா ஜிங்குலியா…சித்திரக்குள்ளன் கலக்குறானே” என்ற வரியும், “சித்திரக்குள்ளி சிலிர்க்குறாளே” என்ற வரிகளும் இடம்பெற்றுள்ளது. இந்த வரிகளில் இருந்து விஜய்யும் நாயகிகளில் ஒருவரும் சித்திரக்குள்ளன், சித்திரக்குள்ளி வேடத்தில் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, நந்திதா என மூன்று நாயகிகள் இருப்பதால், இவர்களில் யார் சித்திரக்குள்ளி என்பதுதான் தெரியவில்லை.

மேலும் இந்த படத்தில் ரோபோ சங்கரும் சித்திரக்குள்ளரான நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இதுவரை யாரும் நடிக்காத வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளதாக கூறியிருந்தார். அவர் சித்திரக்குள்ளன் வேடத்தைத்தான் அவ்வாறு மறைமுகமாக கூறியதாக கூறப்படுகிறது.

Leave a Reply