‘பைரவா’ படத்தின் மலைக்க வைக்கும் வியாபாரம்

‘பைரவா’ படத்தின் மலைக்க வைக்கும் வியாபாரம்

bairava-5விஜய், சமந்தா நடிப்பில் அட்லி இயக்கிய ‘தெறி’ திரைப்படம் இந்த ஆண்டின் மிகச்சிறந்த வெற்றி படமாக இருந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை வாங்க விநியோகிஸ்தர்கள் போட்டி போடுவதால் இதன் ரிலீஸ் உரிமை விலை மின்னல் வேகத்தில் ஏறி வருகிறது.

இதே நிலை நீடித்தால் ‘பைரவா’ படத்தின் வியாபாரம் ‘தெறி’ படத்தின் வியாபாரத்தை மிஞ்சிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘பைரவா’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள ஸ்ரீக்ரீன் புரடொக்ஷன்ஸ் நிறுவனம் இதுவரை மூன்று ஏரியாக்களின் ரிலீஸ் உரிமையை விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலின்படி வட ஆற்காடு, தென்னாற்காடு மற்றும் TK என்று கூறப்படும் திருநெல்வேலி-கன்னியாகுமரி பகுதிகளின் வியாபாரம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுவரை வெளிவந்த தகவலின்படி ‘பைரவா’ படத்தின் வட ஆற்காடு பகுதியின் ரிலீஸ் உரிமை ரூ.3.7 கோடிக்கும், தென்னாற்காடு மற்றும் TK பகுதிகளின் ரிலீஸ் உரிமை தலா ரூ.3.5 கோடிக்கும் விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Leave a Reply