shadow

தினகரன் கட்சியுடன் விஜயகாந்த் கூட்டணியா?

தேமுதிக தலைவர் விஜய்காந்த் இதுவரை திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளையும் விமர்சனம் செய்து வந்தாலும், அவர் தினகரனை இதுவரை விமர்சனம் செய்யவில்லை

மேலும் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ஒரு கூட்டணியை உருவாக்க விஜயகாந்த் திட்டமிட்டுள்ளதாகவும், அந்த கூட்டணியில் தினகரன், சரத்குமார் கட்சிகள் உள்பட ஒருசில கட்சிகளை இணைக்க அவர் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தேமுதிக வட்டாரங்கள் கூறுகின்றன

இந்த கூட்டணியில் கமல்ஹாசன் கட்சியும் இடம் பெறா வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு முடிவுக்கு வந்தால் விரைவில் தேர்தல் அறிவிப்பு வரும் என்பதால் விஜயகாந்த் மீண்டும் அரசியலில் பிசியாகிவிடட்தாக கூறப்படுகிறது.

Leave a Reply