shadow

டெபாசிட் கூட வாங்க முடியாத விஜயகாந்துக்கு இது தேவையா? டுவிட்டரில் பரவும் பரபரப்பு கருத்து

vijayakanthதேமுதிக கட்சியில் இருந்து கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து வெவ்வேறு கட்சிகளுக்கு சென்றுவிட்ட நிலையில், கட்சியை காப்பாற்றி கொள்ளவும், தேமுதிகவினர் விலகியதை மறைக்கவும் அவ்வப்போது பரபரப்பான அறிக்கைகளை விஜயகாந்த் வெளியிட்டு வருகிறார்.

முதல்வர் வேட்பாளராக களமிறங்கி டெபாசிட் கூட வாங்க முடியாத ஒரு தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை குறை கூறவோ விமர்சனம் செய்யவோ எந்தவித தகுதியும் இல்லாதவர் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இன்றுகூட கிரிக்கெட் துறைக்கு மட்டும் கோடிக்கணக்கான ரூபாய்களை செலவு செய்யும் நமது அரசு, அனைத்து விளையாட்டுகளிலும் அதேபோன்ற அக்கறை செலுத்த வேண்டும் என்று விஜயகாந்த் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். விளையாட்டு திறனில் அக்கறை செலுத்த வேண்டும் என்பது குறித்து விஜயகாந்த் கவலைப்பட தேவையில்லை. விளையாட்டுத்துறையை மேம்படுத்த அதற்கென ஒரு துறை அரசிடம் உள்ளது. அதில் ஏதாவது ஒரு தவறு நடந்தால் அதை சுட்டிக்காட்ட மக்களால் தேர்வு செய்யப்பட்ட எதிர்க்கட்சி இருக்கின்றது. ஒரு எம்.எல்.ஏ, ஒரு எம்.பி.கூட இல்லாத ஒரு லட்டர்பேட் கட்சியை நடத்தி வரும் விஜயகாந்த் இதுகுறித்து கவலை தெரிவிக்க தேவையில்லை என்று டுவிட்டரில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

முதலில் விஜயகாந்த் தனது கட்சியினர் வெளியேறுவதை தடுத்து டெபாசிட் வாங்கும் அளவுக்கு திறன் உள்ள கட்சியாக தேமுதிகவை மாற்றிவிட்டு அதன்பின்னர் அவர் தெரிவிப்பது நல்லது என்று டுவிட்டரில் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply