திமுக வெற்றிக்கு இது ஒன்றுதான் காரணம்: விஜயகாந்த் அறிக்கை

திமுக தவிர மற்ற அனைத்து கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி என்று அதிகார பலம் ஆட்பலம் பணபலம் இன்றி தைரியமாக தேர்தல் களம் கண்ட தேமுதிக வேட்பாளர்களை பாராட்டுகிறேன்

இந்த தேர்தலில் திமுக தவிர மற்ற அனைத்து கட்சிகளும் கூட்டணி என்று தனித்தனியாக போட்டியிட்டதால் வாக்குகள் அதிக அளவில் பிரிவதற்கு காரணமாக அமைந்தது

மேலும் ஆளும் திமுக அரசு அதிகார பலத்தை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் தேர்தல் விதிமுறைகளில் விதி மீறல்களில் ஈடுபட்டது

இந்த தேர்தல் முடிவுகள் அனைவரும் எதிர்பார்த்ததுதான். இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்