கடந்த 2ஆம் தேதி தேமுதிக கட்சியின் உளுந்தூர்பேட்டை ஊழைல் எதிர்ப்பு மாநாட்டில் முதல்வரை அவதூறாக பேசியதாக தொடரப்பட வழக்கை உளுந்தூர்ப்பேட்டை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

உளுந்தூர்ப்பேட்டையில் விஜயகாந்த், பிரேமலதா உள்பட ஐந்து பேர் மீது கடந்த வாரம் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக முதல்வரை தரக்குறைவாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்யப்பட்டது.

நேற்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து தேமுதிக தலைவர் பேசியுள்ள நிலையில் இன்று அவதூறு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால், தேமுதிக தொண்டர்கள் வெகு உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Leave a Reply