shadow

இலங்கை பிரதமராக பதவியேற்றுக்கொண்ட ரணிலுக்கு விஜயகாந்த் வாழ்த்து

ranilஇலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்சேவை வீழ்த்தி வெற்றி பெற்ற ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக இன்று கொழும்பு நகரில் நடைபெற்ற எளிமையான விழா ஒன்றில் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு உலகத்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ரணிலின் வெற்றியை ஒருசில கட்சிகள் வரவேற்கவில்லை எனினும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவருக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று, பிரதமராக பதவியேற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் திரு.ரணில் விக்கிரமசிங்கே அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் இலங்கை தமிழர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை உருவாக்கும்  வகையிலும், தமிழர்கள் படும் துன்பங்களுக்கு விடிவை ஏற்படுத்தும் வகையிலும் நீங்கள் நல்லாட்சி நடத்துவீர்கள் என நம்புகிறேன். இலங்கை தமிழர் வாழ்விடங்களில், அமைதி நிலவக்கூடிய வகையில் அங்கிருந்து இலங்கை இராணுவத்தை திரும்பபெற விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply