எனது வீட்டில் இருந்து பணமோ,பொருட்களோ பறிமுதல் செய்யப்படவில்லை: விஜயபாஸ்கர்

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீட்டிலும் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை செய்தனர்

இந்த நிலையில் தனது வீட்டில் இருந்து பல பொருள்களை பறிமுதல் செய்யப்படவில்லை என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிற ஊர்களிலும் சோதனை நடைபெறுவதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன் என்றும் எனக்கு ஆதரவு தெரிவித்த இபிஎஸ் ஓபிஎஸ் அதிமுக தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் சோதனை நடைபெற்று வரும் நிலையில் முழுமையாக நான் பேச விரும்பவில்லை என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்