shadow

விஜய்யின் அடுத்த படத்தை இயக்குபவர் வெற்றிமாறனா?

இளையதளபதி விஜய்யை சமீபத்தில் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் சந்தித்து ஒரு அதிரடி ஆக்சன் கதையை கூறியதாகவும், இந்த கதை விஜய்க்கு பிடித்துவிட்டதால் அவர் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

தற்போது விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படம் முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் இந்த படம் 2019ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

வெற்றிமாறன் தற்போது தனுஷின் ‘வடசென்னை’ படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். இந்த படம் நிறைவடையும் நிலையில் உள்ளதால் விரைவில் அவர் ‘தளபதி 63’ படத்தை தொடங்கும் பணியில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply