கனவுகளுடன் சென்னை வந்தார், கனவுகள் நிஜமானவுடன் சொந்த ஊருக்கு சென்றார்:

 விஜய்வசந்த்

தனது தந்தை 1970 ஆம் ஆண்டு வெறும் கனவுகளுடன் சென்னை வந்ததாகவும், 50ஆண்டுகளுக்கு பின் தன் கனவுகளை எல்லாம் நிஐமாக்கிவிட்ட அவரை சொந்த ஊருக்கு தான் கொண்டு சென்றதாகவும், தொழிலதிபர் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் தனது டுவிட்டரில் உருக்கமான ஒரு பதிவை பதிவு செய்துள்ளார்.

அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: 1970 ஆம் ஆண்டு எனது தந்தை வெறும் கனவுகளுடன் சென்னை வந்தார். 50ஆண்டுகளுக்கு பின் தன் கனவுகளை எல்லாம் நிஐமாக்கிய ஒ௫ உன்னத மனிதராக அவரை அவரின் சொந்த ஊ௫க்கு கொண்டு வந்து சேர்த்தேன். தாங்கள் என் தந்தையை நினைவு கூர்ந்ததர்க்கு நன்றி.

நடிகர் விஜய் வசந்தின் இந்த டுவீட் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

Leave a Reply

Your email address will not be published.