shadow

நயன்தாராவின் டைட்டிலை கைப்பற்றிய விஜய்?

nayanபுதுமுக இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கி வரும் ‘மாயா’ என்ற த்ரில் படத்திற்கு முதலில் ‘நைட் ஷோ’ என்றுதான் டைட்டில் வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் பின்னர் இந்த படத்திற்கு ‘மாயா’ என படக்குழுவினர் டைட்டிலை மாற்றினர். ஆரி, நயன்தாரா, ரோபோ ஷங்கர், அம்ஜத்கான், சரத் மற்றும் பலர் நடிக்கவுள்ள இந்த படம் விரைவில் வெளிவரவுள்ளது.

இந்நிலையில் இதுவரை விஜய் நடித்த ‘தலைவா’ உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.எல்.விஜய், முதன்முதலாக ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார். அந்த படத்திற்கு தற்போது ‘நைட் ஷோ’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ஷட்டர் என்ற மலையாள படத்தின் ரீமேக் படமான இந்த படத்தில் சத்யராஜ் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கின்றார். இப்படத்தை பிரபல எடிட்டரான ஆண்டனி, திரைக்கதை எழுதி இயக்குகிறார். 

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. விரைவில் இசை மற்றும் டிரைலரை வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Leave a Reply