shadow

விஜய் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? எஸ்.ஏ.சியின் குழப்ப விளக்கம்

பிரபல நடிகர்களின் அடுத்த திட்டம் அரசியல் தான் என்பது கோலிவுட்டின் எழுதப்படாத விதியின் வழியில் இளையதளபதி விஜய் கடந்த சில வருடங்களாக அரசியலில் குதிக்க முயற்சித்து வருவதாக செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளது. அவரது விஜய் மக்கள் இயக்கம் அதற்கான ஆரம்பமே என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கடந்த வாரம் விஜய் அரசியலில் குதிப்பது குறித்து பேட்டியளித்த எஸ்.ஏ.சி, ”10, 15 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யை அரசியலுக்கு கொண்டு வர விரும்பினேன். அதில் அதிக ஆர்வம் காட்டினேன். நடிகர் என்பதால் அரசியலில் புகழ் பெற முடியும், அரசியலில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நினைத்தேன். காலப்போக்கில் அரசியல் சுத்தப்படுத்த முடியாத சாக்கடை என்பதை உணர்ந்தேன். தற்போது தமிழகத்தில் எப்படிப்பட்ட அரசியல் உள்ளது என்பதை அனைவரும் அறிவார்கள். இதுபோன்ற அரசியலை பார்த்தது இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எனது மகன் அரசியலுக்கு வர நான் விருப்பப்படவில்லை. விஜய் அரசியலுக்கு வரமாட்டார்’ என்று கூறியிருந்தார்.

ஆனால் நேற்று திடீரென கருத்தை மாற்றியுள்ளார். விஜய் அரசியலுக்கு வரமாட்டார் என்பது தனது தனிப்பட்ட கருத்து என்றும் விஜய் மனதில் என்ன இருக்கின்றது என்பது தனக்கு தெரியாது’ என்றும் கூறியுள்ளார். விஜய் அரசியல் பிரவேசம் குறித்து மாறி மாறி எஸ்.ஏ.சி கூறுவதால் அவர் அரசியலுக்கு வருவரா? வரமாட்டாரா? என்ற குழப்பத்தில் அவரது ரசிகர்கள் உள்ளனர்,.

Leave a Reply