கூகுளில் அதிகம் தேடப்படும் நபராக இருப்பது பெருமைக்கு‌ரிய விஷயமாகவும், அதிக பிரபலத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.

தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களில் அதிகம் தேடப்பட்ட பிரபலமாக விஜய்யை அறிவித்திருக்கிறது கூகுள். ர‌ஜினிக்கு இரண்டாவது இடம். அடுத்து பவன் கல்யாண், மகேஷ்பாபு ஐந்தாவதாக அ‌‌ஜீத்.

தலைவா படத்தின் பிரச்சனை காரணமாக விஜய் குறித்த செய்திகளை தேடியவர்கள் அதிகம். அதுவே விஜய்யை முதல்முறையாக முதலிடத்தில் கொண்டு சேர்த்திருக்கிறது. தலைவா படத்தின் சர்ச்சையிலும் ஒரு பெருமை கிடைத்திருப்பது நல்ல விஷயம்தான்.

Leave a Reply