shadow

நாசர் மகனுடன் செல்பி எடுத்த தளபதி விஜய்

நடிகர் சங்க தலைவரும் பிரபல குணசித்திர நடிகருமான நாசர் அவர்களின் மகன் பைசல் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சாலை விபத்து ஒன்றில் சிக்கி படுகாயம் அடைந்தார். உயிருக்கே போராடிய நிலையில் இருந்த அவர் தற்போது உடல்நிலை தேறி கிட்டத்தட்ட முழுமையாக குணமடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பைசலின் உடல்நலம் குறித்து விசாரிக்க சமீபத்தில் நடிகர் விஜய், நாசர் வீட்டுக்கு திடீரென சென்றார். அவரை பார்த்த நாசர் குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சியில் மூழ்கினர். பைசலிடம் சில நிமிடங்கள் பேசி அவருடைய உடல்நலம் குறித்து விசாரித்த விஜய் அவருடன் செல்பியும் எடுத்து கொண்டார்

விஜய்யின் இந்த திடீர் விசிட் குறித்து நாசர் தன்னுடைய டுவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். விஜய் மற்றும் நாசர் இணைந்து ‘பிரியமுடன்’, ‘தமிழன்’, ‘வசீகரா’, ‘சுக்ரன்’, ’ஆதி’, ‘தலைவா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply