விஜய்சேதுபதியின் ‘ரெக்க’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய்சேதுபதியின் ‘ரெக்க’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

rekkaவிஜய்சேதுபதி, தமன்னா நடிப்பில் சீனுராமசாமி இயக்கிய ‘தர்மதுரை’ படம் வரும் வெள்ளியன்று ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இரண்டே மாத இடைவெளியில் அவருடைய இன்னொரு படம் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரத்தினசிவா இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில்உருவாகி வரும் ‘ரெக்க’ படம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறை வாரத்தில் வெளியாகும் என இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள சிவபாலன் பிக்சர்ஸ் நிறுவனம் டுவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே இதே தேதியில் ரெமோ, தேவி, கவலை வேண்டாம் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதி, லட்சுமிமேனன், கிஷோர், கபீர்சிங், ஹரிஷ் உத்தமன், சதீஷ் மற்றும் கே.எஸ்.ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை காமன்மேன் புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Leave a Reply