shadow

விஜய்சேதுபதி-த்ரிஷாவுக்கு கிடைத்த ’96’ என்னவென்று தெரியுமா?

தமிழ் திரையுலகில் கடந்த 14 ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வரும் ‘கொடி’ நாயகி த்ரிஷா அடுத்து விஜய்சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை  ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கவுள்ளார். இவர் இயக்கும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு ’96’ என்ற வித்தியாசமான டைட்டிலை படக்குழுவினர் தேர்வு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ’96’ என்ற டைட்டிலின் அர்த்தம் கிளைமாக்ஸில்தான் ஆடியன்ஸ்களுக்கு புரியுமாம்

பிரபல தயாரிப்பாளர் நந்தகோபால் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் தொடங்கும் என்றும் கோடைவிடுமுறைக்கு இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply