இந்த கும்பலிடம் இருந்து தள்ளியே இருங்கள்: மாஸ்டர் ஆடியோ விழாவில் விஜய்சேதுபதி பரபரப்பு பேச்சு

இந்த கும்பலிடம் இருந்து தள்ளியே இருங்கள்: மாஸ்டர் ஆடியோ விழாவில் விஜய்சேதுபதி பரபரப்பு பேச்சு

கடவுளை காப்பாற்றுவதாக கூறும் கும்பலிடம் இருந்து சற்று தள்ளியே இருங்கள் என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்

சென்னையில் நேற்று நடைபெற்ற மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் சேதுபதி கொரோனா குறித்து பயப்பட வேண்டாம் என்று கூறினார். மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு மனமார்ந்த நன்றி என்று கூறிய விஜய் சேதுபதி நடிகர் விஜய் நல்ல மனிதர் என்றும் மாஸ்டர் படத்தில் நானும் ஹீரோதான் என்றும் அவர் கூறினார்

மேலும் மதம் மனிதனுக்கு அவசியமில்லாதது என்று குறிப்பிட்ட விஜய் சேதுபதி மனிதனை மனிதன் தான் காப்பாற்ற வரவேண்டும் என்றும் கடவுள் வர மாட்டார் என்றும் தெரிவித்தார்

கடவுளை காப்பாற்றுகிறேன் என்று கூறும் கும்பலிடம் இருந்து சற்று தள்ளியே நில்லுங்கள் என்றும், கடவுளுக்கு தன்னை காப்பாற்றி கொள்ள தெரியும் என்றும் விஜய் சேதுபதி கூறினார் விஜய் சேதுபதியின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply