விஜய்சேதுபதியின் அடுத்த படமும் ரிலீசுக்கு தயார்!

நடிகர் விஜய் சேதுபதி நடித்த ’இடம் பொருள் ஏவல்’ ’மாமனிதன்’ ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ உள்பட ஒரு சில படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது அவர் நடித்துள்ள அடுத்த படமும் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

’விஜய் சேதுபதி 46’ என்று இப்போதைக்கு கூறப்படும் படத்தின் படப்பிடிப்பு முடிவு பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் அனுகீர்த்தி வாஸ் நாயகியாக நடித்துள்ளார்

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்