shadow

dhanush-vijay-sethupathiதனுஷ் தயாரிப்பில் நடிக்க நேரமில்லை என்று வளர்ந்து வரும் நடிகர் விஜய்சேதுபதி அளித்துள்ள பேட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இணையதளங்களில் தனுஷின் சொந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் இந்த தகவலை விஜய் சேதுபதி இன்று மறுத்துள்ளார்.

தற்போது புறம்போக்கு, வன்மம், மற்றும் இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருப்பதாகவும், மேலும் இரண்டு பெயர் வைக்கப்படாத படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாகவும் கூறிய விஜய் சேதுபதி, தற்போதைய நிலையில் தனுஷ் தயாரிக்கும் படத்தில் நடிக்க தன்னிடம் கால்ஷீட் இல்லை என்றும் கூறினார். மேலும் தனுஷ் தயாரிக்க இருக்கும் படத்தில் நான் நடிப்பது குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் என்னுடன் நடத்தப்படவில்லை என்றும், மீடியாக்கள் இந்த செய்தியை கற்பனையாக வெளியிட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply