shadow

சிபிராஜின் ‘கட்டப்பாவை காணோம்’ படத்தில் விஜய்சேதுபதி

1சிபிராஜ் நடித்த திகில்படமான ‘ஜாக்சன் துரை’ சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படமான ‘கட்டப்பாவை காணோம்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்கள் பேராதவை பெற்றுள்ளது.

இந்த படத்தில் வாஸ்து மீன் என்ற கேரக்டர் உள்ளது. பேசும் சக்தியுடைய இந்த வாஸ்துமீனுக்கு விஜய்சேதுபதி டப்பிங் குரல் கொடுக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி தான் நடிக்காத படத்திற்கு டப்பிங் கொடுப்பது இதுவே முதல்முறை.

ஈரம்’ பட இயக்குனர் அறிவழகனின் உதவியாளர் மணிசெய்யோன் இயக்கி வரும் இந்த படத்தில் சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், காளிவெங்கட், மிமிகோபி, சிங்கம்புலி, நலன்குமாரசாமி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகிவ் வரும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply