விஜய்சேதுபதியுடன் இணைகிறார் டி.ராஜேந்தர்.

விஜய்சேதுபதியுடன் இணைகிறார் டி.ராஜேந்தர்.
anand
கோ, அயன், மாற்றான், அனேகன் உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய பிரபல ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை விரைவில் அறிவிப்பார் என கடந்த சில நாட்களுக்கு முன்னரே செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அவருடைய அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ செய்திகள் வெளிவந்துள்ளது.

கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய்சேதுபதி நாயகனாக நடிக்கவுள்ளார். அதுமட்டுமின்றி டி.ராஜேந்தரும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது. கே.வி.ஆனந்த் இயக்கிய முந்தைய படமான ‘அனேகன்’ படத்தையும் இதே நிறுவனம்தான் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திலும் வழக்கம்போல் இரட்டை எழுத்தாளர்கள் சுபா, திரைக்கதை-வசனம் எழுதுகின்றனர். விறுவிறுப்பான ஆக்சன் கதையான இந்த படத்தின் நாயகியாக நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த விவரங்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Chennai Today News: Vijay Sethupathi and T.Rajendar in K.V.Anand’s next

Leave a Reply