shadow

ஜோடி இல்லாமல் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படம்

vijaysethupathiகணவன் – மனைவி இயக்குனர்களான புஷ்கர்-காயத்ரி இயக்கவுள்ள படத்தில் மாதவன், விஜய்சேதுபதி முதன்முதலாக இணைந்து நடிக்கவுள்ளனர் என்ற தகவல் வெளிவந்துள்ள நிலையில் இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஷராதா ஸ்ரீநாத் ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கவுள்ளனர்.

இதில் ஷராதா ஸ்ரீநாத், மாதவனின் மனைவியாக நடிப்பதாகவும், விஜய்சேதுபதி ஜோடியே இல்லாமல் சோலோவாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் கிருமி பட நாயகன் கதிர் முக்கிய வேடத்தில் நடிப்பதால் அவருக்கு வரலட்சுமி ஜோடியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

விக்ரம் வேதா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் தயாரிக்கவுள்ளார். இந்த படத்திற்கு சி.எஸ். சாம் இசை அமைக்கின்றார்.

Leave a Reply