shadow

காலா படத்தில் ரஜினியின் அறிமுகபாடலை பாடும் விஜய் டிவி பிரபலம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘காலா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதனையடுத்து படத்தின் பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் ரஜினியின் அறிமுக பாடலை பாட விஜய்பிரகாஷ் பாடவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் பிரபல பின்னணி பாடகர் மட்டுமின்றி விஜய் டிவியின் நிகழ்ச்சிகளிலும் நடுவராக கலந்து கொண்டு பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ படத்தில் இடம்பெற்ற ‘காதல் அணுக்கள்’ என்ற பாடலை பாடியவர் விஜய்பிரகாஷ் தற்போது முதல்முறையாக ரஜினியின் அறிமுகப்பாடலை பாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply