shadow

ஹாட்ரிக் அடிக்கும் விஜய்யின் வெற்றி கூட்டணி

விஜய்-முருகதாஸ் கூட்டணியில் வெளியான ‘துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’ ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில் தற்போது மீண்டும் ஹாட்ரிக் வெற்றியை பெற விரைவில் இந்த கூட்டணி ஒன்றுசேர உள்ளது.

விஜய் நடிப்பில் அட்லி இயக்கவுள்ள ‘விஜய் 61’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில் விஜய்யின் 62வது படத்தை ஏ.ஆர்முருகதாஸ் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தை ‘கத்தி’ படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாகவும், வெகுவிரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. லைக்கா நிறுவனம் தற்போது ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ‘2.0’ படத்தை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply