விஜய் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இன்னும் பெயர் வைக்கப்படாத ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சென்னை விமானநிலைய அதிகாரிகள் சிறப்பு அனுமதி கொடுத்துள்ளனர்.

விஜய்யின் அடுத்த படத்தின் படப்பிடிப்பின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக கொல்கத்தாவில் நடந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது சென்னையில் சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. அதன் ஒரு முக்கிய பகுதியாக சென்னை விமான நிலையத்தின் ரன்வே பகுதியில் ஒரு சேஸிங் காட்சி படமாக்க திட்டமிட்டிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். அதற்கு விமான நிலைய அதிகாரிகள் நேற்று சிறப்பு அனுமதி கொடுத்தனர். விமான நிலையம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விமான நிலைய ரன்வேயில் வில்லன் நடிகர் தோட்டாராயை விஜய் விரட்டி செல்வது போன்ற காட்சி நாளை படப்பிடிப்பு நடக்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். இந்த படப்பிடிப்பில் சமந்தாவும் கலந்து கொள்கிறார்.  மேலும் இதனை அடுத்து ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி மற்றும் ஐதராபாத்தில் படப்பிடிப்புகள் நடக்கவுள்ளன.

Leave a Reply